Pages

Sunday, April 15, 2012

பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது      ஆண் இனம் பண்டைய காலத்திலிருந்து இந்த காலம் வரை பல கொடுங்கோல் மன்னர்களிடமும், நிலச்சுவாந்தார்களிடமும், சமூகத்தில் உள்ள குண்டர்களிடமும் கொத்தடிமைகளாக இருந்து சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள். சமூக விரோதிகளிடமிருந்தும், காமுகர்களிடமிருந்தும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது குடும்பத்து பெண்களை பாதுகாத்து வருகிறார்கள். இன்றும் சமூகத்திலும், குடும்பத்திலும் ஆபத்தான, கடினமான அம்சங்களை ஆண்களே கையாண்டு கொண்டு பெண்களை பாதுகாப்பதையே முக்கிய பணியாக கொண்டிருக்கிறார்கள். 

      நாட்டின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பை வழங்கும் வீரன் தனது உயிரை பணயம் வைத்து அவரை பாதுகாப்பதை போல.

         ஜனாதிபதி சுதந்திரமாக  தனியாக பாதுகாப்பின்றி திரை அரங்கிற்கு செல்ல நினைத்தாலும் அதனை ஜனாதிபதியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பொறுப்பான மெய்க்காப்பாலன் அனுமதிப்பதில்லை. தனது பாதுகாப்பில் உள்ள தனது பிள்ளைகளையும், பெண்களையும்  அவர்களின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் பொறுப்பான குடும்ப ஆண்கள் பாதுகாப்பதை போல.

     திருமணத்திற்கு முன் ஒரு ஆண் தன்னை மட்டும் காத்துக்கொண்டால் போதும் என்ற நிலையில் அவனது வாழ்க்கை சிறகை விரித்த பறவையை போல தென்றலில் இலகுவாக மிதந்து செல்லும். ஆண்களை விட பெண்களே காம இச்சை அதிகம் படைத்தவர்கள் என்பதால் ஒட்டுமொத்த ஆண் இனமும் திருமணத்தை தவிர்த்துவிட்டாலே ஆண்களுக்கு காம இன்பம் வழிய வந்து எளிதில் இலவசமாக கிடைக்கும்.


     ஆனாலும் ஆண் திருமணம் என்னும் பெயரில் குடும்ப பாரத்தை தாங்கும் சுமை தாங்கியாக மாறி, தன் சுதந்திரத்தை தியாகம் செய்யும் பாதையை தானாக தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறான். அதன் நோக்கம் நற்பண்புள்ள, நல்லொழுக்க பெண் தெய்வங்களை பாதுகாக்கவும்,மனித வாழ்க்கை இலக்கில்லாமல் பயணித்து சமூகம் ஒழுக்கம் கெட்டு சீரழிவதை தடுத்து, சமூகத்தை சீரான அறநெறி பாதையில் வழிநடத்தவும் தான்.

    கடலின் சீற்றத்தில் இலக்கில்லாமல் தத்தளித்து கொண்டிருந்த மரங்களை போல, ஆதி காலத்தில் வாழ்வின் அலைகளில் இலக்கில்லாமல் தத்தளித்து கொண்டிருந்த பெண் இனத்தை படகு என்னும் குடும்பமாக மாற்றி, அந்த படகு பாதுகாப்பாக சென்று சேர வேண்டிய பாதையையும், இலக்கையும் நிர்ணயித்து, அந்த படகை இயக்கும் படகோட்டியாக ஆண்கள் தங்களை தாங்களே நியமித்து கொண்டு, தனக்கு உதவும் துடுப்புகளாக குழந்தைகளை பெற்று பிறவி பெருங்கடலை கடக்க ஆண் முயன்றான்.

    ஆனால்,


      சமீப காலமாக இந்தியாவில் பெண்ணுரிமை என்னும் பெயரில் இந்திய ஆண்களை ஒடுக்கும் அராஜகங்கள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவி ஆண்களும், குடும்பங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் தொழில்களும், அதம் மூலம் தேசத்தின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.

   அவைகளில் முக்கியமானவை,

       1 )  வரதட்சினை தடுப்புச்சட்டம் :

                பாதிக்கப்பட்ட பெண்களை விட பாதிக்கப்படாத பெண்கள் தரும் பொய் புகார்களால் நிலைகுலையும் குடும்பங்களும், முதியவர்களும், பணிகளில் கவனம் செலுத்தமுடியாத ஆண்களும் அதிகம்.

       2 )  குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்.

                பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் தரம் கெட்ட, பலி, பாவங்களுக்கு அஞ்சாத பெண்களால் உண்டாகும் விளைவுகள் தனிமனித உயிருக்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.    

        இவைகள் போதாதென்று திருமண திருத்த சட்டம் என்னும் புதிய சட்டம் தயாராகியுள்ளது. அதன் படி மனைவி விவாகரத்து கோரினால் கணவன் எதிர்த்தாலும் மனைவிக்கு  உடனே விவாகரத்து வழங்கப்படுவதொடு கணவனின் சொத்தில் மனைவிக்கு சரி பாதி உரிமையுண்டு. அதே காரணத்திற்காக கணவன் விவாகரத்து கோரினால் மனைவி மறுத்தால் கணவனுக்கு விவாகரத்து மறுக்கப்படும். ஒருவேலை மனைவியின் ஒப்புதலுடன் கணவனுக்கு விவாகரத்து கிடைத்தாலும் மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை  என்ற சமநீதி இல்லாத சட்டத்திற்கு கேபினெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.

       இத்தகைய சட்டங்களால் பெண்கள் திருமணங்களின் மூலம் பெருமளவு பொருள் ஈட்டும் எளிய வழி உருவாக்கப்பட்டுள்ளது., திருமணங்கள் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சட்டபூர்வமான, லாபகரமான தொழிலாக ( LEGAL PROSTITUTION )  மாற்றப்பட்டுள்ளது.   

      நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட  சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?

      1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.

       2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்

        3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.

        4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.

        5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.

        6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் உள்ள பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, நாட்டின் எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.

         7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.

        8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.

      இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.

      ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?

      நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும்,  தான்.
     

·         தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் மேர்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றசாட்டுகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவிக்கிறது.

·         ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவதர்க்காக இந்திய அமைச்சகங்களுக்கும், பெண்ணுரிமை வாத அமைப்புகளுக்கும் 2010-2011 ஆண்டிற்காக ரூபாய் 67,749.80 கோடி பண பட்டுவாட செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    

http://webapps01.un.org/vawdat abase/searchDetail.action? measureId=37423&baseHREF= country&baseHREFId=633

             நமது நாட்டு மக்கள் ஊழல் பெருச்சாளிகளை தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு வியாபார உலகின் திருடர்கள் லஞ்சத்தை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இந்த பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை தங்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.

            ஏமாற்று பிரசாரங்களை செய்து எத்தகைய பொருட்களையும் விற்று தீர்க்கும் வல்லமை படைத்த வியாபார உலகம், பலகாலமாக ஆண்களை தங்கள்  வியாபார இலக்காக கொண்டு விரும்பத்தகாத மணமுடைய சிகரேட், பீடி, மற்றும் மது வகைகளையே ஆண்மையின் அடையாளம் என்று விற்று வந்தது. ஆண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் விற்று ஒரு உச்சபட்ச நிலையை ( saturation ) அடைந்த நிலையில், ஆண்களை குறிவைத்து ஒரு சில பொருட்களையே வியாபாரம் செய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், பெண் இனத்தை தங்கள் வியாபார இலக்காக கொண்டால் கணக்கிலடங்காத பொருட்களை சந்தை படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உணர்ந்தது. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு பொருளாதார நாடுகளிலும்  ஊழல் பெருசாளிகலான அரசியல் வாதிகளை லஞ்ச லாவண்யங்கள் மூலம் அடக்கி நாட்டை தங்கள் மறைமுக கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதன்பிறகு பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவது மட்டுமல்ல தங்கள் வியாபாரத்திற்கு தடையாக பெண்களை கட்டுபடுத்தும் ஆண்களை ஒடுக்கும் பணிகளையும் ஒருசேர செய்துவந்தனர். அவர்கள் நவீன யுகத்தில் சொந்த மண்ணில் பிறந்த ஆண்களை தொலைவிலிருந்து ஒடுக்கும் ரிமொட்கான்ரோல்களாக செயல்படுகின்றனர்.

      அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார நாடுகளை பதம் பார்த்து, அங்கு மனநல மருத்துவர்களுக்கு பற்றாகுறை ஏற்படுமளவுக்கு மனநல நோயாளிகளை உருவாக்கி சமூகத்தை சீரழித்த இந்த பன்னாட்டு வியாபார சக்திகளின் தற்போதைய இலக்கு தற்பொழுது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நம் இந்திய நாடு.

       உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் தாராளமயமாக்கல் கொள்கையின் முழு பலனையும் அடைய விரும்பும் வியாபார சக்திகள், இந்திய பெண் இனத்தை முழுமையாக பயன்படுத்த தலைப்பட்டுவிட்டன. பெண்களுக்கான சமூக கட்டுபாடுகளை நீக்கி, பெண்களின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதற்க்கு ஆண் இனத்தை அடி பணிந்து போகும் படியான அபாண்டமான சட்டங்களை பெண்ணுரிமை என்னும் பெயரால் அரங்கேற்றி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையோடு, வியாபார சக்திகளின் சேவகனான நம் நாட்டு ஊழல் அரசியல்வாதிகள் அரங்கேற்றி  வருகிரார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கலாக ஊடகங்கள் தன் பங்கை செய்கிறது.

    அணைவரும் அறிந்த ஒரு புகழ் பெற்ற கதையை இங்கு காண்போம் .

       ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

        ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.

              நாட்டு நலனில் உண்மையான அக்கறை இல்லாத ஊழல் அரசியல்வாதிகள் தங்களை புரட்சியாலர்களாகவும்,புத்திசாலிகளாகவும் மட்டுமே நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பியும், தனிப்பட்ட ஆதாயத்திர்க்காகவும் “ ஆண் ஆதிக்கம், பெண் அடிமை “ என்னும் இல்லாத ஆடையை அணிந்துகொண்டு நிர்வாணமாக உலாவருகிரார்கள். ஊடகங்களும்,பேச்சாளர்களும் அரசியல்வாதிகளை அப்பட்டமாக அறிந்த நிலையிலும் கூட தங்களை புத்திசாலிகள் என்று மற்றவர்களுக்கு உணர்த்த விரும்பியும்,சுய ஆதாயத்திற்க்காகவும் இந்த கோஷங்களுக்கு கொடிபிடித்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதோடு ஏதுமறியாத மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். ஒன்றுமறியாத மக்கள் இவர்களை பின்தொடர்ந்து கோசங்களை எழுப்பிகொண்டுள்ளனர். இதனால் உச்சிகுளிர்ந்து ஓட்டுகளை கணக்கு போடும் அரசியல்வாதிகள் தங்கள் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்துகிரார்கள். இவ்வாறு ஆபத்தான சுழற்சிமுறை ( VISIOUS CYCLE ) தொடர்கிறது.


      உண்மையிலேயே பெண் விடுதலை என்ற ஒன்றுக்காக தான் இவர்கள் போராடுகிறார்கள் என்றால்...

-    இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை கடைபிடிக்கப்பட்ட பின்பு தான் பெண் விடுதலை கோசங்கள் தீவிரம் அடைந்ததற்கு காரணம் என்ன ?

-    இதுநாள்வரை பெண் விடுதலைவாதிகளின் முழு கொள்கையையும், அதை அடைவதற்கான பாதையையும் பகிரங்கமாக ஏன்  மக்கள் மன்றத்தில் வைக்கப்படவில்லை ?

-    பெண்களுக்கு ஆதரவாக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் அவசர கதியில், கொல்லைப்புற வழியாகவே நிறைவேற்றப்படுவது ஏன் ?

-    இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும்  பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு  தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே.  விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும் ?


     போக்குவரத்து சாலையில் செல்லும் இத்தகைய பெண்கள் LEFT INDICATOR போட்டுவிட்டு, RIGHT SIDE கையையும் காட்டிவிட்டு நேராக பயணம் செய்பவர்கள். இந்த பெண்கள் தங்களை முட்டாள்களாக்கி ஏமாற்றுகிறார்கள் என்பதை கூட அறியாத மூடர்களும், இத்தகைய பெண்களிடம் தங்களது தேவையை தீர்த்துக்கொள்ள நினைக்கும் பெண் பித்தர்களும் தங்களை பெண் இன பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு இத்தகைய பெண்களுக்கு கொடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

        18 ம் நூற்றாண்டில் தொடங்கி இந்தியாவை அடிமைபடுத்தி சுரண்டிவந்த  மேற்கத்தியர்களிடமிருந்து விடுதலை அடைந்த நம்மை நமது ஊழல் அரசியல்வாதிகள் “பெண் அடிமை” என்னும் மாயை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் மேற்கத்தியர்களின் “ அடிமை தேசமாக “ மாற்றிவருகிறார்கள். 

        மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்கள் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.

                                       -மார்ட்டின் லூதர்