Pages

Monday, May 28, 2012

அணைத்து பெண்களும் ஆண்களால் பாதுகாக்கப்பட தகுதியானவர்களா ?


    முந்தைய நாட்களில் உண்மையிலேயே   பெண்களுக்கு  நடத்தப்பட்ட சில கொடுமைகள் இன்றும் தொடர்ந்தால், பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக, அக்கா தங்கைகளுக்கு சகோதரனாக நம் மனம் கணக்கவே செய்யும்.

     ஆனால் நம் முன் நிற்கும் கேள்வி என்னவென்றால்

    1 ) ஆண்களில் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்று மட்டுமே முழங்கப்படுகிறதே, பெண்கள் அணைவரும் யோக்கியமானவர்கள் தானா ?      
          தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்லகூடிய பெண்கள் இல்லையா? இதையும் தாண்டி இதே காரணத்திற்காக தான் பெற்ற பிள்ளைகளையே கூட கொன்ற பெண்கள் இல்லையா?

    2 ) பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பண்புள்ள ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர  ஊக்குவிக்கப்படுகிரார்களா? அல்லது ஒழுக்கம்கெட்ட ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர  ஊக்குவிக்கப்படுகிரார்களா?

           a ) தனது வீட்டில் வெற்று உடம்புடன் திரியும் ஆண் பொது இடங்களில் தன் உடல் மறைத்து நாகரிகமாக உடை அணிகிறான். பிச்சைக்காரன் கூட கந்தை துணி ஆனாலும் தன் உடல் மறைத்து நடமாடுகிறான். ஆனால் இன்றைய பெண் இனமோ கல்லூரிகளில், பொது இடங்களில் தன் உடல் உறுப்புகளில் அதிகபட்சம் எந்த அளவுக்கு அம்பலப்படுத்தி காமத்தை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்பி சமூகத்தை காமகடலாக்கி EXHIBITIONIST - களாக உலா வருகிறார்கள். இதனால் நம் இளைஞர்களான தேசத்தின் தூண்கள் காம நெருப்பால் எரிக்கப்பட்டு இளைஞர்களின் எதிர்காலமும் தேசத்தின் எதிர்காலமும் அழிக்கப்பட்டுவிட்டது.

            b) எய்ட்ஸ் நோயை தடுக்க பல கோடி ரூபாயில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இக்கால பெண்கள் சமூகத்தில் அரைநிர்வானமாக உலாவந்து, காம தீயை மூட்டி, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்தின் பலனை எல்லாம் நொடியில் அழித்துவிடுகிரார்கள். காமநோயை பரப்பும் நடமாடும் விளம்பர மாடல்களாக உலா வருகிறார்கள்.

            c) பெண்கள் ஆண்களுக்கு பணம் கொடுத்து தங்கள் காம இச்சையை தணித்துக்கொள்ள விலை ஆண்களை தேடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

            d) ஊழல் செய்யும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று இக்கால பெண்கள் நாள்தோறும் நிரூபித்து வருகிறார்கள்.

            e) ஆண் திருடர்களை போலவே பெண் திருடர்களும் உலா வந்துகொண்டிருப்பதாக பேருந்து நிலையங்களில் காவல் துறையின் ஒலிபெருக்கி எச்சரிக்கை.

            f) பெண்கள் வேலைக்கு செல்வது உண்மையில் தனது கணவனுக்கு தோல்கொடுக்கவா ? தங்கள் சுயநலனுக்காகவா ?

              ஆண்களுக்கு சமம் பெண்கள் என்று வாயில் மட்டும் கூறிக்கொண்டு, பணிகளும், பதவிகளும் பெண்கள் தங்களுக்கு ஊதியங்களும் சலுகைகளும் ஈட்டிக்கொல்வதற்காக, தங்கள் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகல்தான் என்றும், கடினமான பணிகளை எல்லாம் ஆண்கள்தான் செய்யவேண்டும் என்றும் சாதுரியமாக நலுவிக்கொள்கிறார்கள்.

            உண்மையில் அணைத்து பணிகளும் பதவிகளும் மக்களுக்கான சேவையை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவைகளே. பாதுகாப்பிற்கே பஞ்சமில்லாத முப்படைகளுக்கே தலைவரான ஜனாதிபதி முதல் போர்முனையில் துப்பாக்கி ஏந்தி மரணத்தை மலர்மாலையாக எண்ணி ஏற்க்க தயாராக இருக்கும் போர் வீரன் வரை அணைவரும் வெவ்வேறு மக்கள் சேவைகளை நோக்கங்களாக கொண்ட இயந்திரங்களே. இந்த இயந்திரங்கள் இயங்க தேவைப்படும் பெற்றோலை போன்றதே ஊதியங்களும் சலுகைகளும். ஒரு இயந்திரம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை இலக்காக கொள்ளாமல் பெற்றோலை உறிஞ்சுவதை மட்டுமே இலக்காக கொண்டால் அதை எந்த பொறுப்புள்ள மனிதனாவது வைத்திருப்பானா ? மக்களுக்கான சேவை உணர்வு இல்லாமல் சம்பளத்தையும் சலுகைகளையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பெண்களை மக்கள் ஆதரிப்பது சரியா ?

   பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அனுபவத்தின் பேரில், சமூக நன்மையை கருதி, கற்றுணர்ந்த சான்றோர்களால் பரிந்துரைக்கப்பட்டவைகளே.

  பெண்பாற் புலவரான ஔவையார் “ தையல் சொல் கேளேல் “ என்று அதாவது பெண்களின் சொற்க்களை கேட்டு நடக்க வேண்டாம் என்று ஆண்களுக்கு அறிவுரித்தியுள்ளார்.

  தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி  “ பெண்வழிச் சேறல் ” என்ற தனது 91- வது அதிகாரத்தில் பெண்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை 10 குறள்களில் பட்டியலிடுகிறார்.

   ஆனால் இன்றைக்கு ஊழலில் கைதேர்ந்த அரசியல்வாதிகளும்,கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களும் தங்கள் சுயநலனுக்காக மக்கள் நலனையும், நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்கும் மகா பாதக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
        
     பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பு தான் தேவையே தவிர பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகள் இல்லாத பாதுகாப்பு என்பது சமூகத்தில் தடைசெய்யப்பட்ட போதைபோருட்களை தடையின்றி புழக்கத்தில் விட்டால் ஏற்படும் பேராபத்தை விட பெறும் நாசங்களையே ஏற்படுத்தும்.

     ஒழுக்கம் கெட்ட பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கமுள்ள ஆண்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு ஒழுக்கமுள்ள பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கம் கெட்ட ஆண்களை ஒடுக்குவதே அறநெறி செயலாகும்.

    ஒரு பெண்ணாக, பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக, அக்கா தங்கைகளுக்கு சகோதரனாக உங்கள் மனதில் “ பெண்கள் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படுவது குற்றம்”  என்று தோன்றினால் அது

           முழுக்க முழுக்க சுயநலத்தின் வெளிப்பாடே !

           சமூக அழிவிற்கான வழியே !!

           தனது சுயநலனுக்காக தேசத்தை அழிக்கும் தேச துரோக செயலே !!!

    இராணுவ படையின் தளபதியே ஆனாலும் அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதே தேசத்திற்கு நன்மை பயக்கும் வழியாகும்.


நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.

                                       -மார்ட்டின் லூதர்

No comments:

Post a Comment