Pages

Tuesday, June 12, 2012

மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்


      ஒரு ஆணும், பெண்ணும் LIFE PARTNER களாக, வாழ்க்கை துணைகளாக திருமண வாழ்வில் இணைகிறார்கள். பங்குதாரர்கள் சேர்ந்து செய்யும் எந்த ஒரு செயலானாலும் சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என்பது ஒரு நியாயமான முறை ஆகும். தம்பதிகளாக வாழ்வில் இணையும் இவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாக தொடங்க  பொருளாதாரம் அடிப்படை தேவை. ஆணின் பெற்றோர் தன் பங்கிற்கு சொத்துக்களையோ அல்லது சொத்து இல்லை என்றாலும் தன் மகனை வாழ்நாள் முழுவதும் உழைத்து போடா கடமை பட்டவனாக அனுப்புகின்றனர். அதே போல் பெண்ணின் பெற்றோர் தங்கள் பங்கிற்கு என்ன செய்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரார்கள். அதுவும் ஆணின் பெற்றோர்களின் பங்களிப்பிற்கு சமமான பங்களிப்பை கேட்பதில்லை. இது எப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் ? ஆணின் இன்பத்தில் சமபங்கு கேட்கும் பெண்தரப்பு தனது பங்கை தட்டி கழிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் ?

      திருமணம் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்க கூடாது என்றால், பெண் தனக்கு கணவனாக வரப்போகிறவனின் சொத்து, வேலை, சம்பளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஆணை திருமணம் செய்ய மறுக்கிறாளே அவளுக்கு என்ன தண்டனை உள்ளது?

     அடுத்தவர்களின் ஆடம்பர வாழ்வை போல வாழ எண்ணி தன் கணவனை வற்ப்புறுத்தி மன உளைச்சல் கொடுக்கும் பெண்ணிற்கு என்ன தண்டனை உள்ளது?

       சொகுசு வாழ்வு தராத கணவனை கழட்டிவிட்டு கள்ளக்காதலனை ஏற்படுத்திக்கொண்டு தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தனது கணவனை  கள்ளகாதலனுடன் சேர்ந்து கொல்லும் பெண்களுக்கு பிரத்தியேகமாக  என்ன தண்டனை உள்ளது ?  நீதி தேவதை பெண் என்பதால் நீதிமன்றங்கள் பெண்ணுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட வேண்டுமா ? நீதி தேவதையும் கலங்கப்படுத்தப்பட்டுவிட்டாளா?

    சமூகத்தில் அணைத்து ஆண்களும் வரதச்சனை வாங்காமல் செய்வதன் மூலம் ஆண்களின் மாண்பை தியாகிகளாக்கி உயர்த்தலாம் என்று கூறிக்கொண்டாலும் ஒரு ஆண் தனது சூழ்நிலையை கருதி தனக்கு எந்த மாண்பும் வேண்டாம் சாதாரண மனிதனாகவே இருக்கிறேன் என்று கூறும்பட்சத்தில் அவனை விளங்கு முனையில் மிரட்ட அரசிடம் என்ன நியாயம் உள்ளது ?

   ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஊடகங்களின் மூலம் நாம் அன்றாடம் அறிந்து வரும் உண்மை என்னவென்றால், இக்கால கலியுக காம கிளத்திகளும்,” தான் “ என்ற அகங்காரத்துடன் அராஜகம் செய்யும் பெண்களும் தங்களுக்கு கட்டுப்படாத ஆண்களை அடக்கி அடிமையாக்க போலியாக இந்த சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான்..

   ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுபடலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்றார் காந்தி. ஆனால் நிரபராதிகள் மட்டுமே தண்டிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த சட்டம் தேவையா ?

    வரதச்சனை தடுப்பு சட்ட என்பதே ஆண்களுக்கு எதிரான அநியாய சட்டம். இந்த அநியாய சட்டமே ஆண்களுக்கு எதிராக இன்னொரு அநியாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

        இந்த அநியாய சட்டம் நீக்கப்பட வேண்டும்.முதலீடு போட்டு தொழில் தொடங்கும் பங்குதாரர்கள் பிரச்சினைகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக ஒப்பந்தம் செய்து கொள்வதை போல திருமணத்திற்கு முன்பு பெண்ணின் சீதனத்தையும் ஒப்பந்தமாக பதிவு செய்யும் நடைமுறை ஏற்படுத்த வேண்டும்.

                              அல்லது

      ஒரு பெண் தான் வரதட்சனை கொடுக்கமாட்டேன் என்று கூற வேண்டுமானால் அவள் மாப்பிள்ளையின் சொத்தை பற்றியோ, வேலை, சம்பளம் என்று எதை பற்றியும் கருத்தில் கொள்ளாமல் அவனது ஒழுக்கத்தையும், பண்பையும் மட்டுமே ஆராய்ந்து ஏற்பதும், அதன் பின் வாழ்வின் அணைத்து துன்பங்களிலும், இன்பங்களிலும் தனது கணவனுக்கு தோலோடு தோல் கொடுத்து நின்று, தனது கணவன் எல்லா துன்பங்களில் இருந்தும் மீள்வதற்கு எல்லா விதங்களிலும் உட்றதுணையாக இருந்து, தனது கணவனின் பாரத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பான மூன்றாவது கையாக இருக்க வேண்டும்
.
      ஆனால் இப்படிப்பட்ட ஒரு அன்பு தெய்வத்தை, தனது துன்பத்தை பங்கிட்டுகொள்ளும்’ தனது மூன்றாவது கையை எந்த ஒரு காட்டுமிராண்டி ஆணாக இருந்தாலும் சிறிதேனும் துன்பப்படுத்த எண்ணுவானா ? அல்லது வரதச்சனை கொடுமை செய்வானா ?

       கண்டவர்களை எல்லாம் குறைக்கும் நாயை கூட அதன் தலையில்  அன்பாக தடவிவிட்டால் வாலை ஆட்டிக்கொண்டு நம்மிடம் பவ்யமாக ஐக்கியமாகும் போது, காட்டுமிராண்டி கணவனாக இருந்தாலும் அவன் மேல் தூய்மையான அன்பை மழையாக பொழிந்து, அன்பான மூன்றாவது கையாக இருந்து, தன்னை பாதுகாப்பவனாக தன் கணவனை மாற்ற வழி உள்ளபோது, தன் கணவன் தன்னை துன்புருத்துகிறான் என்று கூறும் ஒரு பெண் , அன்பு என்னும் ஆயுதத்தை கையாலாகாதவளாக மட்டுமே இருந்தாக வேண்டும். தனது கணவனுக்கு அன்பான மூன்றாவது கையாக இல்லாதவளாகவே மட்டுமே இருந்தாக வேண்டும். தன்னை உடலை விற்கும் விலை மாது என்றும், தன் கணவனை கட்டணம் செலுத்தவேண்டிய நுகர்வோராக கருதுபவளாக மட்டுமே இருந்தாக வேண்டும்.

         ஆணிடம் இன்பத்தில் மட்டும் சமபங்கு கோராமல் ஆணின் வாழ்வின் அணைத்து அம்சங்களிலும், துன்பங்களிலும் சம பங்கு ஏற்பவளே உண்மையான இல்வாழ்க்கை துணையாக இருக்க முடியும்.

       ஆனால், திருமணமாகும் பெண்களை உடலை விற்கும் விலை மாதர்கள் என்றும், நுகர்வோர்களான ஆண்களுக்கு இந்த விலை மாதர்களிடமிருந்து பொருளாதார பங்களிப்பை பெற எந்த உரிமையும் இல்லை என்று பெண்களை தரம் தாழ்த்துவதே இந்த சட்டத்தின் உண்மையான அர்த்தம் ஆகும் .

       அப்படியானால் இந்த சட்டப்படி இந்த விலை மாதர்கள் ஆண்களை திருமணம் ஏன் செய்ய வேண்டும் ? விலை மாதர்கள் இருக்க வேண்டிய இடம் விபச்சார விடுதிகள் தானே ?

         ஒரு ஆண் வரதட்சனை வாங்குகிறான் என்றால் அவன் தன்னை தானே விலைக்கு விற்பதாக அர்த்தம் என்கின்றனர்.

     ஆனால், உண்மை என்ன ?

     ஒரு பெண்ணின் தந்தை ஒரு மாப்பிள்ளைக்கு வரதட்சனை கொடுக்காமல் தனது பெண்ணை மட்டும் கொடுக்கிறார் என்றாலும் அவர் தனது பெண்ணை ஒரு பிட்சைகாரனுக்கு கொடுப்பதில்லை. மாப்பிள்ளையின் சொத்து அல்லது சம்பளம் இவைகளை கணக்கில் வைத்துதான் கொடுக்கிறான். இதன் உண்மையான அர்த்தம் மாப்பிள்ளையின் சொத்துக்களை தனது பெண் அனுபவிப்பதற்கு பதிலாக தன் பெண்ணின் உடம்பை, அழகை மாப்பிள்ளை அனுபவிக்கட்டும் என்பதே ஆகும். வரதட்சனை கொடுக்காமல் மாணத்தை விற்கும் பெண்ணின் தந்தையிடமிருந்து மாப்பிள்ளை தான் பெண்ணை விலைக்கு வாங்குகிறான்.

     ஆனால் மாணமுள்ள பெண்ணின் தந்தையோ தன் பெண் விற்பனைக்கு அல்ல, மாறாக ஒரு ஆணுக்கு இல்வாழ்க்கை துணையாக தான் அனுப்புகிறேன் என்றும், மாப்பிள்ளை பொருளாதார துணையுடன் வருவதை போல் நானும் எனது பங்கிற்கு எனது பெண்ணை பொருளாதார துணையுடன் அனுப்புகிறேன் என்றும் கூறுவார்.

     நாம் இங்கு அணைத்து ஆண்களும் வரதட்சனை வாங்கியே தீர வேண்டும் என்பதை வலியுறுத்த வரவில்லை. பொருளாதார துணை இல்லாமல் வரும் பெண்ணை எனது பொருளாதாரத்தை வைத்தே காப்பாற்றுவேன் என்று கூறி பெருந்தன்மையுடன் தானே முன்வரும் பண்பட்ட ஆண்மகனை குறை கூற நாம் யார் ? ஆண்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் அளவுக்கு இன்றைய பெண்களுக்கு தகுதிகள் உள்ளதா என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது ?

    ஆண்கள் வரதட்சனை வாங்கவேண்டாம் என்ற வேண்டுகோலோடு நிறுத்திக்கொள்ளாமல் விளங்கு முனையில் மிரட்டுவதற்கு அரசிடம் என்ன நியாயம் உள்ளது ? நாட்டில் மதுவும், புகைப் பழக்கமும் நீக்கமற பரவியிருப்பதர்க்கு சட்டமியற்றியா செயல்படுத்தினார்கள் ? இதுவே ஆண்மையின் அடையாளம் என்ற ஒரு வெற்று பிரச்சாரம் போதுமே.

   இருந்தாலும் இந்திய அரசு ஆண் சமூகத்தின் மேல் அடக்கு முறைகளை ஏவி விடுவதன் நோக்கம் சமூக நீதியை நிலை நாட்ட அல்ல என்பதும் அதன் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதையும் “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “
http://arasuganabathy.blogspot.in/2012_04_01_archive.html
 என்ற பதிவில் பார்க்கவும்.


நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.

                                       -மார்ட்டின் லூதர்