Pages

Monday, July 2, 2012

சமூகத்தில் காமுகிகள் பெருக என்ன காரணம் ?


      அறம் அறிந்த நம் முன்னோர்கள் சமூக நன்மையை கருதி பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள். இதனை ஆண்கள் அணைத்து அதிகாரங்களையும் தாங்களே வைத்துக்கொண்டு பெண்களை அடிமையாக வைத்திருப்பதாகவும், பெரும்பாலான ஆண்கள் காமுகர்கள், அயோக்கியர்கள், சமூகத்தில் நடக்கும் அணைத்து தீமைகளுக்கும் ஆண்களே காரணம் என்றும், பெண்கள் தயாலகுணம் படைத்தவர்கள், நேர்மையானவர்கள், சக்தியின் சொரூபம் என்றும், ஆண்களின் பிடியிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பும், அதிகாரமும் வழங்கப்பட்டால் சமூகத்தில் நேர்மையும், ஒழுக்கமும், நீதியும் தலைத்து ஓங்கும் என்றும் பெண்ணியவாதிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

      அதனை தொடர்ந்து பெண் பாதுகாப்பு சட்டங்கள் என்று கூறி எண்ணற்ற அஸ்த்திரங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அந்த அஸ்திரங்களை கொண்டு சமூகத்தில் ஒழுக்கத்தையும், நேர்மையையும், சமூக நீதியையும் புதிதாக மலர வைப்பார்கள் என்றும், மிகப்பெரிய சமூக நன்மை ஏற்படும் என்றும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

      ஆனால் அணைவரின் எதிர்ப்பார்ப்பான சமூக நன்மைக்கு மாறாக சமூகத்தில் பெண்கள் செய்யும் ஒழுக்க சீர்கேடுகளின் பட்டியல் ஆண்களின் பட்டியலை விட நீண்டு கொண்டு போகிறது.

      உதாரணத்திற்கு சில,

1.        தனது கள்ள தொடர்பை நேரடியாக பார்த்துவிட்ட பத்து வயது மகளை கொன்ற தாய் கைது.

2.        தேனிலவுக்கு மூனாற்றிர்க்கு சென்ற பெண் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தால்.

3.        மருமகனுடன் கள்ளக்காதல். மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது.

4.        பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த தங்கையை கேட்ட அண்ணனை கொன்ற தங்கைக்கு ஆயுள் தண்டனை.

5.        சமூகத்தில் கள்ளக்காதல் பெருகிவருகிறது.

6.        முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே தனது மகளையும் உதறிவிட்டு கள்ளக்காதலனை மணந்த அஸ்ஸாம் பெண் எம்.எல்.எ வுக்கு பொது மக்கள் சராமாரியாக அடி.

      இவைகள் எல்லாம் TIP OF ICE BERG ஐ போன்று ஊடகங்களில் வெளிவரும் சம்பவங்கள். இன்னும் வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ள சம்பவங்கள் எண்ணில் அடங்காதவை.

     பெண்களுக்கு பாதுகாப்பும், அதிகாரங்களும் வழங்கப்பட்ட பின்பு தான் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சமூகத்தில் காம வெள்ளம் பெருக்கெடுத்து, ஒழுக்க சீர்கேடுகள் அரங்கேறுகிறது என்றால் இதன் மூலக்காரணம் என்ன ?

ஆராய்வோம்.

     அறம் அறிந்த நம் முன்னோர்களோ அல்லது எந்த ஒரு பெற்றோரோ தனது பெண்களை வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. வாழ்வின் துன்பமான, அபாயகரமான அம்சங்களை ஆண்களே கையாண்டுகொண்டு பெண்களை பாதுகாக்கவே முயன்றிருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவர்கள் தங்கள் பட்டறிவின் மூலம் சுய நலம் இன்றி, சமூக நன்மைகளுக்கு முக்கியதுவம் கொடுத்தே வாழ்வியல் நெறி முறைகளை அவ்வப்பொழுது செதுக்கி செப்பனிட்டு வந்திருக்கிறார்கள். பெண்களை சார்ந்த அவர்களின் அணைத்து அனுகுமுறைகளிலும் இரண்டு விஷயங்கள் அதன் அடிப்படையாக புலப்படுகிறது.

1.        ஆண்களை விட பெண்களே காம இச்சை அதிகம் படைத்தவர்கள்.

2.        காம இச்சை உடல் சம்பந்தப்பட்டது இல்லை. அது மனம் சம்பந்தப்பட்டது. மனக் கட்டுப்பாட்டால் அதனை கட்டுப்படுத்த முடியும்.

இதனை பற்றி இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது ?

1.        ஆண்களை விட பெண்களே காம இச்சை அதிகம் படைத்தவர்கள் என்பது உண்மையே.

     a ) ஆண்களுக்கு TESTOSTERONE என்னும் காம உணர்வை தூண்டும் SEX ஹார்மோன் ஒன்று மட்டுமே உள்ளது. ஆனால் பெண்களுக்கு ESTROGEN மற்றும் PROGESTERONE என்னும் இரண்டு SEX ஹார்மோன்கள் உள்ளது.

     b ) ஆண்களில் TESTOSTERONE என்னும் SEX ஹார்மோன் அது உற்பத்தி ஆக ஆரம்பித்த காலங்களில் இருந்து அவர்களின் பிள்ளை பருவத்தில் சில மாறுதல்களை தவிர அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரே சீரான அளவு தான் உற்பத்தி ஆகும்.

        ஆனால் பெண் SEX ஹார்மோன்களில் குறிப்பாக ESTROGEN என்னும் SEX ஹார்மோன் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி ஆகி கொண்டிருப்பதோடு மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதவிடாய் மாதத்தின் மத்திய காலங்களிலும் அபரிமிதமான அளவு உற்பத்தி ஆகிறது. ( ESTROGEN SURGE ) ( LH SURGE மூலமாக )

ஆண்களின் காம இச்சையின் வீரியம் : ஒரு மராத்தான் ஓட்டப்பந்தைய வீரனை போன்றது. வாழ்நாள் முழுவது ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் அதன் வீரியம் குறைவு.

பெண்களின் காம இச்சையின் வீரியம் : நூறு மீட்டர் ஓட்டப்பந்தைய வீரனை போன்றது. ஒவ்வொரு மாதமும் ஓய்வு எடுத்துக்கொண்டு பின் அடுத்த மாதம் முழு வீரியத்துடன் செயல்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதவிடாய் மாதத்தின் மைய காலங்களிலும் காம உணர்வுகள் தட்டி எழுப்பப்படுகிறது.

2.        காம இச்சை உடல் சம்பந்தப்பட்டது இல்லை, அது மனம் சம்பந்தப்பட்டது என்பது உண்மையே.

ஓரு ஆண் அல்லது பெண் தங்கள் மனதில் தனக்கு பிடித்த முறையே பெண் அல்லது ஆணை தனது இச்சைபடி சில கோலங்களில் நினைத்தாலே அவர்களின் காம உணர்வுகள் தூண்டப்பட்டுவிடும்.( இதன் அடிப்படையில் தோன்றியதே சுய இன்பம் )

மனக்கவலையுடனோ அல்லது தனக்கு உயிருக்கு உயிரான அன்பு கொண்ட ஒருவர் இறந்தாலோ காம உணர்வு தோன்ற வழியே இல்லை.

இவை போன்ற காரணங்களால் காம இச்சைக்கு மனமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே தான் மருத்துவத்தில் SEX  சம்பந்தப்பட்ட பிரச்சினை மனநல மருத்துவத்தின் ஓரு பிரிவாகவும் உள்ளது.

எனவே மனதை கட்டுப்படுத்தினால் காம உணர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.  


இந்த அறிவியல் பூர்வ உண்மையின் நடைமுறை யதார்தத்தை பார்ப்போம் :

        ஆண்களை விட பெண்களே காம உணர்வு அதிகம் கொண்டவர்கள் என்றால் பெண்கள் தான் ஆண்களை இடைமறித்து, பலவந்தப்படுத்தி , ஆண்களை கற்பழித்திருக்க வேண்டும். மாறாக ஆண்கள் தான் இத்தகைய செயல்களை பெண்களிடம் சமீப காலம் வரை செய்தார்கள்.

 காரணம் :

     1 ) ஆண்கள் உடல் வலிமை படைத்தவர்கள் . பெண்களால் ஆண்களை பலவந்தப்படுத்த முடியாது.

     2 ) மிக முக்கிய காரணம் :

        நமது முன்னோர்களான சான்றோர்கள் பெண்களின் மனதை கட்டுப்படுத்த, நல்வழிப்படுத்த தந்திரமாக பயன்படுத்திய உத்திகளை சமீப காலம் வரை பெண்கள் வழுவாமல் கடைப்பிடித்துக் கொண்டிருந்ததால் பெண்கள் தங்கள் காம உணர்வை தங்களின் மனக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
     
     பெண்களின் மனதை கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் பெண்களுக்கு இட்ட கட்டுப்பாடுகளை தான், மனப் பயிற்சிகளை தான் பெண் அடிமை விளங்கிடப்பட்டுள்ளதாக பெண்ணியவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உத்திகள் தான் என்ன ?

    நம் முன்னோர்கள் பெண்களுக்கு இட்ட கட்டுப்பாடுகள் அணைத்தும் ஒரே இலக்கை தான் அடிப்படையாக கொண்டது.

  அது,

      பெண்களின் காட்டாற்று வெள்ளம் போன்ற காம உணர்வை நெறிப்படுத்தி, முறையாக கால்வாய்களில் செல்வதற்கு கால்வாயின் இருபுறமும் கட்டப்பட்ட தடுப்புகள் தான் இந்த பெண்களுக்கான கட்டுப்பாடுகள், மனப்பயிர்ச்சிகள்.

-    பதிபத்தி விரதம்
-    கணவனே கண் கண்ட தெய்வம்
-    கல் ஆனாலும் கணவன் ,புல் ஆனாலும் புருசன்

      என்பன போன்ற இன்னும் அணைத்து கட்டுப்பாடுகளும், கணவனை மையமாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வழக்க முறைகளும் பெண்ணின் பறந்து விரிந்த காம உணர்வை கணவனிடம் மட்டுமே குவிய செய்து மனதை கட்டுப்படுத்தும் மனப்பயிர்ச்சிகள் தான் இந்த கட்டுப்பாடுகள்.

      கண் மறைப்பு இல்லாத குதிரை கண்ணில் கண்டதை எல்லாம் மேய்வதை தடுக்க கண் மறைப்பு போடுவதை போல “ பொம்பளை சிரிச்ச போச்சி புகையிலை விரிச்சாப் போச்சி “ என்பன போன்ற பிற ஆண்களுடன் பேசுவதை அல்லது பழகுவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

      நன்கு கவனியுங்கள். நம் முன்னோர்கள் பெண்களின் காம உணர்வை முழுமையாக தடுத்து நிறுத்தவில்லை. அவற்றிற்கு சிறப்பான, நேர்மையான கால்வாயை தான் கட்டியிருக்கிறார்கள். ஏற்படுத்தப்பட்ட தடுப்பு அதன் வழியில் அல்ல, மாறாக அதன் இரு புறங்களிலும் தான்.

      உடன் கட்டை ஏறுதல் போன்ற கொடூர முறைகள் கண்டிப்பாக நல் இதயம் கொண்ட நம் முன்னோர்களால் ஏற்படுத்தியிருக்க முடியாது. தன் கணவன் மீது உயிரையே வைத்திருந்த அன்பு மனைவி அவனது இறப்பு தாங்காமல் தானும் இறந்திருக்க கூடும் , அதையே சில அரை வேக்காடுகள் கட்டாயமாக்கியிருந்திருக்க வேண்டும்.

      பெண்மையை நெறிப்படுத்தும் கட்டுப்பாடுகளை தடைக்கற்கள் என்று கூறிக்கொண்டு அவற்றை தகர்த்தெறிய கிளம்பியிருக்கும் வீரர், வீராங்கனைகளாகவும், பெண்களின் வாழ்வை வானுயர செய்யும் வேங்கைகளாகவும் தங்களுக்கு தாங்களே மகுடம் சூடிக்கொண்டு இன்னும் வீண் ஜம்பம் பேசிக் கொண்டிருக்கும் வீணர்கள் பெருகியிருக்கிரார்கள்.

     அவர்கள் உடைத்துக்கொண்டிருப்பது பெண்களுக்கான தடை கற்களை அல்ல. சமூகத்தின் பாதுகாப்பு அரண்களை தான்.

     இதன் விளைவு

·         பெண்களில் EXHIBITIONISTS  அதிகமாகிவிட்டார்கள். ( பொது இடங்களில் தனது பாலியல் உடல் உறுப்புகளை எதிர்பாலாருக்கு [ OPPOSIT  SEX ]  காட்டுவதன் மூலம் தாங்கள் காம இன்பம் அனுபவித்து வருபவர்கள். ). இவர்கள் ஆண்களுக்கும் காம தீயை பற்றவைக்கிரார்கள். இவர்களால் பலியாவது நற்பண்புகளை போதிக்கக்கூடிய ஆசிரியர்களும் தான்.

·         தற்பொழுது கல்விக் கூடங்கள் கல்வி கற்கும் இடமாக இல்லாமல், காம இச்சைக்கு வடிகால் அமைத்து தரும் இடமாக மாறியுள்ளது.

·         தனது குடும்ப சூழலை எண்ணி வைராக்கியமுடன் கற்க எண்ணும் மாணவன் கூட ஓரு சில மாதங்களில் இந்த பெண்களால் காம உணர்வு தூண்டப்பட்டு விடுகிறான்.

·         டாக்டர். அப்துல் கலாமின் கல்லூரி நாட்களில் இந்த EXHIBITIONISTS இருந்திருந்தால் நாடு ஓரு சிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கும் என்பது உறுதி. ஆனால் இன்றைய தேசம் இந்த EXHIBITIONISTS - களால் எத்தனை எதிர்கால விஞ்ஞானிகளை இழந்து கொண்டிருக்கிறதோ !!

·         விலை மாதர் தொழில் அழிந்து போகும் அளவுக்கு இலவச மாதர்கள் பெருகிவிட்டார்கள். இதனையும் தாண்டி விலை ஆண்களை தேடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

·         அரசாங்கமே திருடி கையில் அவள் பாதுகாப்பிற்கு துப்பாக்கியை கொடுத்தது போல, காமுகிகள் கையில் பெண் பாதுகாப்பு சட்டங்களை கொடுத்துள்ளது. இதன் மூலம் இவர்கள் தனது கள்ளத்தொடர்பை கண்டிக்கும் கணவன்களை பழிவாங்கி வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை காக்கக்கூடிய உழைக்கும் ஆண் வர்க்கம் தரம் கெட்டவள்களின் பொய் வழக்குகளால் அநீதி மன்றங்களில் வஞ்சிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.

·         பெண்களால் தங்களை திறமையின் அடிப்படையில் வெளிப்படுத்திக் கொள்வதை விட தங்களின் கவர்ச்சியின் அடிப்படையில் வெளிப்படுத்திக் கொள்ள மட்டுமே முடிகிறது. தங்கள் காரியங்களை சாதிக்க பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே. உடல் கவர்ச்சியில் தேர்ந்தவர்களை தான் வீர் வேங்கைகள் முன்னேற்றுகிரார்கள். கவர்ச்சியில் தேராதவர்களை இவர்கள் பெண்கள் பட்டியலில் கூட சேர்ப்பதில்லை. அலுவலகங்களில் பெண்களும், ஆண்களும் பணிகளில் கவனம் செலுத்தாமல் காம போதையில் மயங்கி கிடப்பதால் அலுவலக, சமூக, தேச பணிகள் முடங்கி கிடக்கும் அவலங்கள் நிகழ்கிறது.

·         நாட்டில் குழந்தைகள் ஒற்றை பெற்றோர் அல்லது அனாதைகளாக விடப்பட்டு நெறிப்படுத்திய வளர்ப்பில்லாமல், சமூக விரோதியாக உருமாறும் அவலம். நாட்டின் எதிர்காலம் இருண்ட காலமாக தெரிகிறது.

    பெண்ணியவாதிகளின் இந்த சமூக, தேச விரோத செயல்களின் பிண்ணனி என்ன ?

    இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை காம போதையில் மிதக்கவிட்டு, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளை இலாபம் அடைந்து வருகின்றனர். நம் நாட்டில் காம போதையில் மிதந்து கிடக்கும் காதலர்களும், கள்ளகாதலர்களும் ஒருவருக்காக மற்றோருவர் கவுரவத்தின் பெயரால் எத்தகைய செலவுகளையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதால் பன்னாட்டு வியாபாரிகள் இவர்களையே தங்களின் முக்கிய நுகர்வோர்களாக கருதுகிறார்கள், அதற்காக பன்னாட்டு வியாபாரிகளே சமூகத்தில் காமத்தை திட்டமிட்டு பரப்பியும் வருகிறார்கள். நாட்டில் பெண்ணியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இந்த சமூக, தேச விரோத சக்திகள் பெண்ணுரிமை என்னும் பெயரால் பன்னாட்டு நிதி உதவியுடன் ஊக்குவிக்கப்பட்டு, சமூகத்திற்கு எதிராக செயல் பட்டுவருகிரார்கள் என்னும் அதிர்ச்சி செய்தி தேசப்பற்று உடைய ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்தையும் சூடேற்றி வருகிறது.  அதன் பின்னணியில் உள்ள சதியை மேலும் அறிய  http://arasuganabathy.blogspot.in/ என்னும் வலை பதிவில் உள்ள “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “ என்ற பதிவில் பார்க்கவும்.
    
       மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம்  இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.


நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்

No comments:

Post a Comment