Pages

Wednesday, October 24, 2012

கட்டுக்கோப்பான குடும்பத்தின் ஆதார சக்தி


        மனித இனத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆண், பெண் தங்கள் காம உணர்வை புணர்ந்து தீர்த்து கொள்வதும், ஆண் தன் இச்சை தீர்ந்ததும் தன் வேலையை பார்த்துக் கொண்டு சென்றுவிடுவதுமாக இருந்தான். பெண்ணே அதன் விளைவுகளை தனியாக எந்த பாதுகாப்பும் இன்றி, கேட்பாரற்று, வலியையும், வேதனையையும் சந்தித்து, குழந்தைகளை ஈன்று,பாலூட்டி, குறிப்பிட்ட நாள் வரை வளர்த்து வந்தாள்.

       தான்தோன்றி தனமாக திரிந்த ஆண் பிறகு நாகரிக வளர்ச்சியின் பொழுது, கருவுற்று உடல் உபாதையுடன் இருக்கும் பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்க தொடங்கினான்.

       ஒரு பெண், கட்டுப்பாடு இன்றி திரிந்த ஆணை தன் பால் ஈர்த்து, தன்னை பாதுகாப்பவனாக மாற்ற அவளிடம் உள்ள ஒரே சக்தி அன்பு என்னும் சக்தி மட்டுமே.

       இந்த அன்பு என்னும் ஈர்ப்பு சக்த்தியே அந்த ஆண் மற்றும் பிள்ளைகளை பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்கவும், ஒரு கட்டுகோப்பான குடும்பம் உருவாகவும் காரணமாக அமைகிறது.

       அதாவது, சூரிய குடும்பத்தில் அணைத்து கோள்களும் நடுநாயகமான சூரியனை சுற்றி வந்து ஒரு கட்டுக்கோப்பான குடும்பமாக இருப்பதற்கு முக்கிய காரணம், சூரிய குடும்பத்தில் உள்ள அணைத்து கோள்களின் மீதும் சூரியன் கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி ஆகும். அதே போல் மனித இனத்தில் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பான அமைப்பிற்கு முழுமுதற் காரணம் குடும்பத்தின் நடுநாயகமான பெண் தன் குடும்பத்தில் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பு என்னும் ஈர்ப்பு சக்த்தியே ஆகும். இந்த ஈர்ப்பு சக்தியால் சூரியன் பாதுகாக்கப்படுகிறதோ, இல்லையோ ஆனால், பெண்  நிச்சயம் பாதுகாக்கப்படுகிறாள்.

      இந்த அன்பு என்னும் ஆதார சக்தியே அணைத்து ஆண்களுக்கும் பெண்களை பாதுகாக்கவேண்டும் என்ற உள் உணர்வுக்கு காரணமாக உள்ளது. ஒரு ராணுவ வீரனுக்கு தன் நாட்டை தந்தை நாடு என்று சொல்லி கற்பிப்பதை விட தாய் நாடு என்று சொல்லி கற்பிக்கும் பொழுது தான் தன் தாய் நாட்டிற்காக எதனையும் செய்ய துணியும் அற்பணிப்பு உணர்வு மேலோங்குகிறது. ஒரு ஆணுக்கு தன் தந்தை துன்பப்படும் பொழுது தோன்றும் வீரத்தை விட தன் தாய் துன்பப்படும் பொழுது தோன்றும் வீரமே மேலோங்குகிறது. தினமும் குடித்துவிட்டு பொறுப்பற்று தன் மனைவியை அடித்து உதைக்கும் காட்டுமிராண்டி கணவன் கூட தன் மனைவியை மற்றவர்கள் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான். ஒரு தந்தை அல்லது தாய் தங்கள் பிள்ளைகளை திட்ட, அடிக்க தனக்கு உரிமை உள்ளதாக நினைப்பதை போல் குடிக்காரனும் தன் மனைவியிடம் அடிக்கவும், அணைக்கவும் உரிமை எடுத்து கொள்கிறான். படித்த நாகரிகமான ஆண் தன் அன்பான மனைவியை துன்புறுத்த மாட்டான். பாதுகாப்பாக மட்டுமே இருப்பான். இதுவே அன்பு என்னும் ஈர்ப்பு சக்தி உள்ள பண்பான பெண்களை பற்றி பெரும்பாலான ஆண்களின் பொதுவான மனநிலை.

       ஆனால், இன்று இந்திய தேசத்தில் உள்ள பெண்களை தங்களின் நுகர்வோர்களாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய குடும்பங்களை சிதைத்து பெண்களை பிரித்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதற்க்கு பெண்களுக்கு பாதுகாப்பாக பெண்களிடம் இருந்த குடும்பத்தின் ஆதார சக்த்தியான அன்பு என்னும் அஷ்த்திரத்தை அழித்து பெண்களிடம் சுயநலத்தை விதைக்கும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்னும் மயக்க பிஸ்கட்டுகளை பிரபளபடுத்தி வருகின்றனர். பெண்களுக்கு தான்தோன்றி தனத்தை கற்பித்து, ஊக்கப்படுத்த ஊழல் அரசியல்வாதிகளின் துணையோடு ஆண்களை அடிமையாக்கும் அநியாய சட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

  
        அன்பு என்னும் ஆயுதத்தால் தங்களை தாங்களே பாதுகாத்து வந்த இந்திய பெண் இனம் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் மகுடிக்கு ஆடும் விசப்பாம்புகளாக உருமாறி வருகின்றனர். இவர்கள் குடும்பங்களில் அன்பு என்னும் ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில், தன் கணவனை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தானே கொலை செய்யவும் துணியும் நிலையில், தனது கள்ளதனத்தை நேரில் கண்ணுற்ற தனது பிள்ளைகளையே கொல்லும் நிலையில், இனியும் பெண்கள் ஆண்களால் பாதுகாக்கப்படுவார்களா ? ஆண்கள் இவர்களை பாதுகாத்து தான் ஆக வேண்டுமா ? மனித இனத்தை உற்பத்தி செய்யும் இந்த உயிருள்ள ஜடங்கள் பாதுகாக்கப்படவில்லை எனில் மனித இனம் அழியும் காலத்தை எதிர்நோக்கியுள்ளதா ?

இவைகள் எல்லாம், நாம் கலிகாலத்தின் பெரும் பகுதியை கடந்து வந்துகொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் நினைவூட்டுகிறது.

Tuesday, October 23, 2012

இக்காலத்தில் பெண்கள் அணைவரும் உத்தமிகளா ?


     சமூகத்தில் உள்ள பெண்களில் உத்தமிகளும், காமக்கிளத்திகளும் எத்தனை விழுக்காடு உள்ளனர் என்பதை அறிய முற்பட்டால் அணைத்து காமக்கிளத்திகளும் உண்மையை ஒப்புக்கொள்ள போவதில்லை. எனவே அறிவியல் முறையிலான புள்ளிவிவர கணக்கீட்டிலும் கூட பதில் கண்டறிய முடியாத கேள்விதான் இது. எனவே நாம் எதார்த்த காரணங்களை ஆராய்வோம்.

மனித உடல் ஒரு வேதியியல் தொழிற்ச்சாலையே ! அதில் உள்ள ஒவ்வொரு வேதியியல் பொருட்களும் அதன் அளவிற்கு ஏற்ப அதற்க்கான வேதி வினைகளையும், அதன் விளைவுகளான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

இரத்தத்தில் குளுகோஸ் அளவுக்கு அதிகமானால் சர்க்கரை நோய் ஆகும். இது 100 % அணைத்து மனித குலத்திற்கே பொதுவான நியதி ( சர்க்கரை நோய் மருத்துவர் உட்பட )

பல நாட்கள் உணவு உண்ணாமல் இருந்து அதானால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்தால் மனிதர்கள் மயங்கி விழுவர், இறந்தும் போவர். இதுவும் அணைத்து மனித குலத்திற்க்கு 100% பொதுவானது.

அதே போன்று,
  
பெண்களுக்கான SEX ஹார்மோன்களில் முக்கியமான ESTROGEN ஒவ்வொரு மாதமும் அபரிமிதமாக உற்பத்தி ஆகிறது. இதனால் காம உணர்வுகள் தூண்டப்படுகிறது. இது 100 % அணைத்து பெண்கள் சமுதாயத்திற்கும் பொதுவானது. ( கற்புக்கரசி கண்ணகி, சீதை உள்பட )

இவ்வாறு  SEX ஹார்மோன்கள் மாதாமாதம் அதிக அளவு உற்பத்தி ஆவதும், இதனால் பெண்கள் காம உணர்வு தூண்டப்படுவதும் பெண்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இதற்கான பழியை பெண்கள் ஏற்க்க வேண்டியதும் இல்லை.

ஆனால்,

      கரை புரண்டு பெருவெள்ளமாக பொங்கி வரும் ஆற்றை அணை காட்டி தடுத்து பயிர்கள் பாசனம் பெரும் வகையில் செய்து நெறிப்படுத்தியதை போல பெண்கள் பொறுப்பாக முடியாத அவர்களுக்குள் உருவாகும் காமப்பெருக்கை பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய மனப்பயிற்ச்சிகளை போதிக்கும் ஒழுக்க முறைகளை நம் முன்னோர்களான சான்றோர்கள் வகுத்து, அவைகளை பெண்களுக்கு கட்டுப்பாடுகளாக விதித்தனர். சமீபத்திய தலைமுறை வரையிலான பெண்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றி, தங்கள் காமத்தை அடக்கி, ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி கொண்டிருப்பதாலேயே அவர்கள் தெய்வங்களாக மதிக்கப்பட்டனர், மதிக்கப்படுகின்றனர்.

      அணை உடைக்கப்பட்டால் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது 100 % உறுதி. அதே போல் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டால் காம வெள்ளம பெருக்கெடுத்து ஓடுவதும் 100 % உறுதி. காம உணர்வை நெறிப்படுத்தும் கட்டுப்பாடுகளை உடைத்து காமத்தை பெருக்கெடுத்து ஓட செய்யும் பெண்ணியவாதிகள் அதன் அணைத்து விளைவுகளுக்கான முழு பழியையும் ஏறக்க வேண்டியவர்களே.

     இவர்கள் பெண் சுதந்திரம் என்பது காம சுதந்திரத்தை தான். வி****களாக மாற துடிக்கும் இவர்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை தான்.


சமூகத்தில் உள்ள பெண்களில்,

1.        ஒழுக்க கட்டுப்பாடுகளை அனுசரித்து நடக்கும் உத்தமிகள்.
2.        பெண் சுதந்திரம் என்னும் கோசங்களை ஆதரிக்கும் சுய சிந்தனை அற்ற ஆட்டு மந்தை பெண்கள் கூட்டம்.
3.        பெண்ணியம் பேசும் சுயநல பெண்ணியவாதிகள்
என்று மூன்று வகையினர் தான் உள்ளனர்.

   “சிந்தனை திறன் உள்ள, சமூக அக்கறை உள்ள, பெண்ணியவாதியான உத்தமிகள்”  என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை.


பெண்ணியம் பேசும் பெண்கள்,
சுய சிந்தனை அற்ற ஆட்டுமந்தை கூட்ட பெண்களாக இருக்க வேண்டும்.

இல்லையேல்,

100 % சுய நல (அல்லது) காமக்கிலத்திகளாக மட்டுமே இருந்தாக வேண்டும். ( பெண்ணியத்தின் அடிப்படை சுயநலம் தானே. பெண் சுய நலத்தின் அடிப்படை காமமும் தானே.)

சுய சிந்தனை அற்ற ஆட்டு மந்தை பெண்கள் கூட்டமும் காமகிலத்திகளாக பரிணாமம் அடையும் பாதையில் பயனிப்பவர்களே.

ஒரு பெண் சமூகத்தில் உத்தமியாக உருவாக போகிறார்களா ? அல்லது காம கிளத்தியாக உருமாற போகிறாளா ? என்பது

1.        சமூகத்தில் ஒரு பெண் உத்தமியாக வளர்வதற்கான காரணிகள் வளுபெற்றுள்ளதா ? அல்லது காமக்கிளத்தியாக வளர்வதற்கான காரணிகள் வளுபெற்றுள்ளதா ? என்பதை பொருத்தும்,

2.        இந்த காரணிகளில் எதனை பின்பற்றவேண்டும் என முடிவு செய்யும் அந்த பெண்ணின் சுய சிந்தனை திறனையும், உள்ளத்தின் உறுதியை பொருத்தும் நிர்ணயிக்கப்படுகிறது.

      பெண்களின் நலன் கருதியும், சமூக நலன் கருதியும் பெண்களுக்கு போடப்பட்ட ஒழுக்க கட்டுப்பாடுகளை பல நூறு ஆண்டுகளாக சாகும் வரை வழுவாது கடைப்பிடித்து உயிர் நீத்த உத்தமிகளின் கடைசி தலை முறையாக இன்றும் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களில் இளைய தலைமுறை பெண்கள் வீட்டில் இருக்கும் சொற்ப நேரத்திலும் அவர்களை நல்வழிப்படுத்தும் கட்டுப்பாட்டு அறிவுரைகளை தவறாமல் சொல்லித்தான் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த இளைய தலைமுறை பெண்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருக்கும் நேரமே அதிகமாக இருப்பதாலும், வெளியில் இவர்களை காமக்கிலத்திகளாக மாற்ற தூண்டும் காரணிகளே கழுத்து வரை கொட்டிகிடப்பதாலும்  தங்கள் பெற்றோர்கள் சொற்ப நேரங்களில் உபதேசித்த ஒழுக்க நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, பெண்ணியத்தை ஆதரிக்கும் சுய சிந்தனை அற்ற ஆட்டு மந்தை கூட்டமாக முதலில் மாறுகிறார்கள். பின்னர் படிப்படியாக தங்கள் பெற்றோருக்கு தெரியாமலும், பின்னர் தன் பெற்றோர்களை எதிர்த்து நின்றும் முழுநேர கலியுக காமகிலத்திகளாக பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தை, நாட்டை சீரழிக்கும் அரும்பெரும் பணிகளை செய்ய துவங்கிவிடுகிரார்கள்.

      தன் தோழி பாய் பிராண்டுடன் சுற்றுவதால் தானும் பாய் பிரெண்டை தேடிக்கொள்வதும், பெண் விடுதலை என்ற பெயரில் இக்கால பெண்கள் எல்லை மீறுவதும், காமக்கிலத்திகளாக மாறுவதும் என்று சமூக, தேச கலாச்சார பேரழிவு நகந்தேரி வருகிறது.


    போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் சீராக சென்றுகொண்டிருந்த சிக்னலில் ஒரு பைத்தியக்காரி இடையில் உள்ளே புகுந்து தாறுமாறாக சுற்றினால் வாகனங்கள் அவள் மீது மோதாமல் தவிர்க்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு, ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படுவதை போல, பல நூறு ஆண்டுகளாக நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சீராக இயங்கிய சமூகத்தில் இந்த சுய சிந்தனை அற்ற ஆட்டுமந்தை  பெண்கள் கூட்டம் உள்ளே புகுந்து செய்யும் அட்டூளியங்களாலும், இந்த ஆட்டு மந்தை கூட்டத்தையே பாதுகாக்கும் பொருட்டு நடக்கும் முயர்ச்சிகளாலும் சமூகத்தில் நடக்கும் விபத்துகள் தான் எத்தனை ? எத்தனை ?

    ஒழுக்கமான சமூகத்திர்க்கான சட்ட திட்டங்களை அறிந்த டிராபிக் கான்ஷ்டபிளை போன்ற ஒழுக்கமான பரம்பரையின் கடைசி தலை முறையை சார்ந்த இன்றைய எஞ்சியுள்ள பண்பாளர்கள் இக்கால பெண்களான ஆட்டுமந்தை கூட்டங்களால் சமூகத்தில் தினம் தினம் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கும் விபத்துகளுக்கு ஒரு நேர்மையான நிரந்தர தீர்வு காணாவிட்டால் இவர்களின் இந்த கடைசி தலைமுறைக்கு பின்னர் சமூகத்தை காப்பாற்ற எந்த நாதியும் இல்லாத நிலை ஏற்பட்டு விடும். அதன் பிறகு 100 % பெண்களும் காமக்கிலத்திகளாக மட்டுமே இருப்பார் என்பது 100 % உறுதி.

        இலட்சுமண ரேகையை தாண்டி சென்ற சீதையை மீட்டுவந்த ராமபிரான் சீதையை அக்னி பிரவேசன் செய்ய வைத்து உணர்த்தும் உண்மை என்னவென்றால், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மனைவியே ஆனாலும் பெண்கள் வாய்ப்புகள் வாய்க்கைபடும் பொழுது தங்கள் உள்ள கிளர்ச்சியை கொப்பளிக்க விடும் வாய்ப்புகள் உள்ளது என்பதே ஆகும்.
 
        இலட்சுமணன் என்னும் இரண்டாம் ஆள் வரைந்த இலட்சுமண ரேகையை தாண்ட துணிந்த சீதைக்கு தன்னுடைய சொந்த மனக் கட்டுப்பாடு என்னும் ரேகையை தாண்ட வெகு நேரம் தேவைபடாது என்னும் செய்தியை கூற விரும்பும் ராமபிரான் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை என்னவென்றால், சான்றோர்களான நம் முன்னோர்களால் உண்டாக்கப்பட்ட சமூக கட்டுப்பாடுகள் என்னும் இலட்சுமண ரேகையை தாண்ட துணிந்த இக்கால பெண்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடுகள் என்னும் ரேகையை தாண்ட நொடிப்போழுதே போதும் என்பதே ஆகும்.

       சீதை என்பவள் தெய்வப்பிறவி என்பதால் அவள் தனது மனதை கட்டுப்படுத்தி வென்றாள். ஈனப்பிரவிகளான இக்கால பெண்களோ பல அடுக்கு சமூக கட்டுப்பாடுகளுக்குள் பத்திரப்படுத்தப்பட்டால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்று உள்ள நிலையில் இந்த பல அடுக்கு சமூக கட்டுப்பாடுகளையே கிழித்து வரும் இக்கால பெண்களின் காமப்பெருக்கின் வீரியத்தை என்னவென்று சொல்வது.

     அக்கால ஆட்ச்சி பொறுப்பில் இருந்த நம் பண்டைய முன்னோர்கள் அன்றைய சான்றோர்களின் அறிவுரை படி சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை தரவல்ல சட்டதிட்டங்களை ஆராய்ந்து அவற்றை சுயசிந்தனை இல்லாத கூட்டங்களுக்கும், சுய நல பெருச்சாளிகளுக்கும் மற்றும் அணைவருக்கும் கட்டளைகளாக இட்டு அணைவரையும் கட்டுப்படுத்தி சமூகத்தின் நலனையும், நாட்டின் நலனையும் பாதுகாத்து வந்தனர்.

       ஆனால், சமீப காலங்களில் ஆட்ச்சி பொறுப்பில் உள்ளோர் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் அக்கறை இல்லாமல் தங்களது பதவிகளையும், பேராசைகளையும் அடையும் எண்ணம் கொண்டு மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். சுய இலாப நோக்கை எண்ணி செயல்படும் ஊடகங்களாலும், பன்னாட்டு நிறுவனங்களின் திட்டமிட்ட சதி செயல்களாலும் சுய சிந்தனை அற்ற ஆட்டுமந்தை கூட்டங்கள் எளிதில் திசை திருப்பப்பட்டு வருகிறார்கள்.  சுய நல காம கிளத்திகள் சமூகத்தையும், நாட்டையும் மீட்க்க முடியாத அழிவு பாதையில் அசுர வேகத்தில் செலுத்திகொண்டிருக்கிறார்கள்.


     இதனை பற்றி மேலும் விவரமாக அறிய இதே http://www.arasuganabathy.blogspot.in/   தளத்தில் "சமூகத்தில் காமுகிகள் பெருக என்ன காரணம் ?" என்னும் பதிவில் காணவும்.

Monday, October 22, 2012

ஆண் தியாகத்தை ஆணாதிக்கம் என்றும், பெண் சுயநலத்தை பெண்ணியம் என்றும் பரப்பிவரும் பன்னாட்டு வியாபார கொள்ளை கூட்டம்.


         இந்த பூமி பந்தில்  Homo sapiens sapiens என்ற  Modern human  என்ற மனித இனம் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகிறது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இணைந்து வாழ்ந்து வந்த ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பெரும்பாலும் சச்சரவுகள் இன்றியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிரியாகவோ, ஒரு பெண் ஒரு ஆணை எதிரியாகவோ நினைத்தது இல்லை. அவர்களின் வாழ்க்கை போராட்டமெல்லாம் இவர்கள் இருவரையும் தாண்டி மூன்றாவது நபர்களை,காரணிகளை எதிர்த்தே இருந்திருக்கிறது.
   
        ஆனால் சமீப காலமாக ஆணாதிக்கம், பெண்ணியம் என்னும் கோசங்கள் எட்டுதிக்கும் முழங்கப்பட்டு, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் உண்மை, பொய் என்ற பாகுபாடு இல்லாமலும், நியாயம் அநியாயம் என்ற பேதம் இல்லாமலும் ஆண்களை வஞ்சம் தீர்க்கும் வகையில் இன்று சட்ட அமைப்புகளும், சமூக அமைப்புகளும் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

        இந்த ஆணாதிக்கம், பெண்ணியம் என்னும் கருத்துகள் உருவாவதற்கு முந்தைய  காலத்தையும், அது உருவான சூழ்நிலையையும் மற்றும் காரணத்தையும், தற்போது அது ஏற்படுத்தி வரும் விளைவுகளையும் இங்கு சற்றே உற்று நோக்குவோம்.

           இன்றைய இயந்திர, கணிப்பொறி தொழில் நுட்ப காலத்திற்கு முந்தைய கால மனித வாழ்க்கை என்பது அபாயகர வன விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும், இயற்கை பேரிடர்களிடமிருந்தும், உணவுக்கான கஷ்டங்களிலிருந்தும் மனிதன் தப்பித்து உயிர் பிழைப்பது என்பதே ஒவ்வொரு நாளும், நிமிடமும் பெரும் போராட்டம் மிகுந்தவைகளாகவே இருந்துள்ளது.

            
        ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்கவேண்டிய நிலைமையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மைவிட பலமான விலங்குகளிடமிருந்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தன. ஆண்கள் தனக்காகவும், தனது பெண் துணைக்காகவும் உணவு தேடி  காடு மேடுகளில் அலைந்தும், அபாயகரமான விலங்குகளிடம் போராடியும் தங்கள் உயிரை பணயம் வைத்து  பெண்களை பாதுகாப்பான இருப்பிடங்களில்  தங்கவைத்து பாதுகாத்து வந்தனர்.  (  இதனை தான் இக்கால பெண்ணியவாதிகள் ஆதிகாலம் முதலே ஆணாதிக்க ஆண்கள் பெண்களை வீட்டில் அடைத்து வைத்து ஒடுக்குவதாக கூப்பாடு போடுகிறார்கள். இத்தகைய கூப்பாடு பெண்களுக்கு நன்மை பயக்க கூடிய செயலா ? அல்லது பெண்களை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து தங்களது நுகர்வோர்களாக மாற்ற துடிக்கும் பன்னாட்டு வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் செயலா ? )

         ஆண் தனது கடின உழைப்பால் இரத்தமும், வியர்வையும் சிந்தி  பெரும் பாறைகளும், கற்களும், முட்புதர்களும் நிறைந்திருந்த காடுகளையும் மேடுகளையும் சமப்படுத்தி, உழுது, பயிருட்டு உணவு தானியங்களை உருவாக்கினான்.  பெண்கள் இலகு வகை பணிகளையும், உணவு சமைப்பதையும் செய்து வந்தார்கள். ( இரத்தமும், வியர்வையும் சிந்தி உடலை வருத்தி செய்யும் கடின பணிகளை பெண்கள் செய்ய வேண்டாம் என்று எந்த ஆணும் எந்த காலத்திலும் அவர்களை தடுத்து ஒடுக்கியதில்லை. ஆனால் இன்றைக்கு கடின பணிகளையும் இலகுவாக செய்யக்கூடிய இயந்திர, கணிப்பொறி தொழில்நுட்ப காலத்தில் பெரும்பாலும் உடலை வருத்தும் கடின பணிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பெண்ணியவாதிகள், தொன்றுதொட்டு ஆண் இனம் வேலை வாய்ப்புகளை தங்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டு பொருளீட்டி பொருளாதார பலம் பெற்று வருவதாகவும், பெண் இனத்திற்கு வேலை வாய்ப்பும், பொருளாதார சுதந்திரமும் மறுக்கப்பட்டு, பெண்களை அடிமைகளாகவே நடத்துவதாகவும் குள்ளநரி தனமாக ஊளையிட்டு வருகிறார்கள். ஆனால் வீர வசனம் பேசிவரும் பெண்ணியவாதிகள் இன்றைக்கும் உடலை வருத்தக்கூடிய, உயிருக்கு உத்திரவாதமில்லாத அபாயகரமான பணிகளை தந்திரமாக புறந்தள்ளி வருகிறார்கள். இவர்களின் நோக்கம் தேச முன்னேற்றத்திற்கு தங்கள் உழைப்பை தருவதல்ல, தங்கள் உடல் நோகாமல் பொருளாதார பலம் பெறுவது மட்டுமே. இந்த பொருளாதாரம் பெண்ணினத்தை தங்கள் நுகர்வோராக மாற்ற துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மட்டுமே )

         விலங்குகளை அடக்கி, காட்டை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றி மன்னர்கள் ஆண்டுவந்த கால கட்டத்தில் எதிரி நாட்டு மன்னர்கள் தொடுக்கும் போரிலிருந்து தங்களது பெண்டு, பிள்ளைகளை பாதுகாக்க போர்களில் பெண்களை ஈடுபடுத்தாமல் ஆண்கள் தங்களை மட்டுமே ஈடுபடுத்தி தங்கள் உயிரை இழந்து வந்துள்ளனர். ( இது ஆணாதிக்கமா ? அல்லது ஆண் தியாகமா ? )          கொடுங்கோல் மன்னன்களிடம் கொத்தடிமைகளாக பெரும்பாலும் ஆண்களே உடலை வருத்தி உயிர் துறந்திருக்கிரார்கள். அடிமை பெண்கள் பெரும்பாலும் காமத்திர்க்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். ( பெண்ணியவாதிகளின் அடிப்படை கொள்கையே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இல்லாத பாலுறவு சுதந்திரம் தான். ஆக பெண்ணியவாதிகளின் கொள்கை படி கொடுங்கோல் மன்னர்கள் காலத்திலும் கூட பெண் இனம் துன்பங்களை அனுபவித்தது இல்லை என்பது தான் அர்த்தம். பெண்ணியவாதிகளை பொருத்தவரையில் தங்கள் கற்பை இழப்பதில் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட சாதி, மத, நிற, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து உடைய ஆண்களிடம் தான், அதுவும் குறிப்பிட்ட சில வழிமுறைகளின் படி தான் தனது கற்பை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மற்ற ஆண்களிடம், வேறு விதமாக தங்கள் கற்பை பெண்ணிய வாதிகள் இழந்தால் கற்பழிப்பு சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். கற்பை பெண்ணடிமையின் ஒரு அடையாளமாக கருதும் இன்றைய பெண்ணிய வாதிகள் கூறும் கற்பழிப்பு குற்றசாட்டுகள் தீண்டாமையின் ஒரு வடிவமே அன்றி வேறு அல்ல. )

 
           அணு என்பது மிகச்சிறிய துகள். ஆனாலும் அதனுள் நடக்கும் நிகழ்வுகள் அண்ட சராசரங்களிலும், பிரபஞ்சங்களிலும் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஒப்பானதாகும். அணுவை திறம்பட கையாண்டால் பேராற்றலை வெளிப்படுத்த முடியும் என்பது விஞ்ஞான உண்மை. அதே போல் குடும்பம் என்னும் அமைப்பு சிறியது என்றாலும் அது சமூக, தேச, உலகத்தின் பயணத்தை தீர்மானிக்கும் வல்லமை கொண்ட அமைப்பாகும். குடும்ப உறவுகளின் உணர்வுகளை, பிள்ளைகளின் மனங்களை திறம்பட கையாண்டு செப்பனிட்டு வளர்த்தால் சமூக, தேச, உலக செழுமைக்கான மாபெரும் மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது நடைமுறை யதார்த்தம். பெண்களிடம் குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் சமூக, தேச, உலக செழுமைக்கான மாபெரும் மாற்றங்களை உருவாக்கும் பெரும் பொருப்பு வழங்கப்பட்டுள்ளது. ( சுயநல பெண்ணியவாதிகள் தாங்கள் குடும்பங்களில் அடைக்கப்பட்டு  அடிமைபடுத்தப்பட்டு வருவதாக கூறி குடும்ப அமைப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். குடும்ப அமைப்புகள் பெண்களை அடிமைப்படுத்தும் இடமாக கருதும் இவர்கள் திருமண பந்தங்களில் நுழையாமல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு திருமணங்களை செய்து கொள்கிறார்கள். தாங்கள் குடும்பங்களில் அடிமை படுத்தப்படுவதாக கூப்பாடு போட்டுகொண்டு தங்களின் முக்கிய குடும்ப பொறுப்புகளை, கடமைகளை தொலைத்து தான்தோன்றி தனமாக செயல்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வருமானத்தை வாரி வழங்கி வருகிரார்கள். குடும்ப பொறுப்பை தட்டி கழித்து வெளியே பொருள் ஈட்டிவரும் இவர்கள் ஆண்களுக்கு நிகராக கடின உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் எதனையும் செய்வதில்லை.  பணியை செய்வதற்காக தான் ஊதியம் என்று இருந்த நிலையைமை இவர்கள் பணிகள் என்பதே பெண்கள் பொருளாதார பலம் பெறுவதற்காக மட்டுமே உள்ள ஒரு சம்பிரதாயமாக  மாற்றியுள்ளார்கள். இவர்களால் சமூக, தேச பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளுக்கான வாய்ப்புகள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. )
                    19- ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில், நவீனத்துவத்தின் சூழ்நிலையில் பெண்ணியம் என்ற பிரச்சாரம் பரப்பப்பட்டது. பிரான்ஸ் நாட்டை சார்ந்த சைமன் தெபௌவோ  ( Simon De Beauvoir ) என்பவர் எழுதிய இரண்டாவது பாலினம் ( The second sex, 1949 ) என்ற நூலுக்கு பின்னர் பெண்ணிய கோசங்கள் மேலும் பிரபளப்படுத்தப்பட்டது. தொழில் துறையில் கடின போட்டி ஏற்பட்டு அதிக நுகர்வோர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இடங்களில் எல்லாம் இது போன்ற கருத்துகள் விதைக்கப்பட்டு பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இதனால் பெண் இனத்தை தங்களின் முக்கிய நுகர்வோர்களாக மாற்றும் அனைத்து தந்திரங்களும் கையாளப்பட்டது. அதன் படி பெண்கள் குடும்ப அமைப்புக்கு கட்டுப்படாதவர்களாகவும், நீதி, நியாயத்திற்கு கட்டுப்படாதவர்களாகவும், பொருளாதார வளம் உள்ளவர்களாகவும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்

     .அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 1991 -ம் ஆண்டு காலகட்டத்தில் புகுத்தப்பட்ட தாராளமயக்கொள்கைக்கு பின்பு  இந்தியாவிலும் பெண்ணியவாத பிரச்சாரங்கள் பன்னாட்டு வியாபார நிறுவனங்களால், இந்திய ஊழல் ஆட்சியாளர்களின் ஆதரவோடு படு தீவிரமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக குடும்பம் என்னும் கப்பலை கட்டுப்படுத்தும்  மாலுமிகளை பொய் வழக்குகளால் அடக்கி ஒடுக்கும் வகையில் ஒருதலைபட்சமான, அபாண்டமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதன் மூலம் குடும்ப பொறுப்புகளில் ஈடுபட்டு வந்த பெண்களை தங்கள் பொறுப்புகளை தட்டிகலித்துவிட்டு வெளியில் பொருள் தேட வர்புருத்தப்பட்டார்கள். இதனால் தனது குடும்பத்திற்காக பொருள் ஈட்டிவந்த ஆண்களின் பணிகள் தட்டி பறிக்கப்பட்டு அந்த ஆணின் குடும்பம் நிர்கதியாக நிற்பதும், பணிக்கு போகும் பெண்களின் குடும்பம் இரண்டு வருமானம் பெற்று அபரிமிதமான பொருளாதாரத்துடன் இருப்பதும். இந்த அபரிமிதமான பொருளாதாரம் பெற்றுள்ள ஒரு சாரார் சந்தையில் அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையை நிர்ணயிப்பவர்களாகவும், சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிக்கு போகாமல் உள்ள பெண்களை தங்கள் கணவனிடமிருந்து அநியாயமான விதத்தில் பணத்தை பறிக்கும் விதமாக இந்தியாவில் பொய் புகார்களை செய்வதற்காகவே வரதட்ச்சினை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், திருமண திருத்த சட்டம், கணவன் மனைவிக்கு ஊதியம் வழங்கும் சட்டம் போன்ற வழிமுறைகள் காண்பிக்கப்பட்டன.
 
       இவ்வாறாக பெண்கள் தாங்கள் ஈட்டிவந்த பொருளாதாரத்தை அழகுசாதன பொருள்களுக்காகவும், கேளிக்கைகளுக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும், போதை பொருட்களுக்காகவும், கலாச்சார சீரழிவு பார்ட்டிகளுக்காகவும் செலவழித்து வருகிறார்கள். இவ்விதமாக நம் தேசத்தின் பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது.  இதனால் பெண்கள் குடும்ப பொறுப்பை தட்டிகளித்து குடும்பங்களை சீரழிந்தும், ஒரு ஆணின் வேலையை தட்டி பரித்து அந்த ஆணின் குடும்பத்தை நலிவுற செய்தும், அந்நிய கலாச்சார மோகத்தால் தனது பொருளாதாரத்தை அந்நிய நாட்டிற்கு தாரைவார்த்தும் வருகிறார்கள்.

       இவ்வாறாக பன்னாட்டு வியாபாரிகள்  ஆண்களின் தியாகத்தை ஆணாதிக்கம் என்று பிரச்சாரம் செய்து, சுயநல தேச துரோக பெண்ணிய  கூளிப்பட்டாலத்தை உருவாக்கி, ஊழல் ஆரசியல்வாதிகளின் துணையோடு தேசத்தின் பொருளாதாரத்தை சுரண்டி அழித்தொழித்து வருகிறார்கள்.