Pages

Monday, October 22, 2012

ஆண் தியாகத்தை ஆணாதிக்கம் என்றும், பெண் சுயநலத்தை பெண்ணியம் என்றும் பரப்பிவரும் பன்னாட்டு வியாபார கொள்ளை கூட்டம்.


         இந்த பூமி பந்தில்  Homo sapiens sapiens என்ற  Modern human  என்ற மனித இனம் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகிறது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இணைந்து வாழ்ந்து வந்த ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பெரும்பாலும் சச்சரவுகள் இன்றியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிரியாகவோ, ஒரு பெண் ஒரு ஆணை எதிரியாகவோ நினைத்தது இல்லை. அவர்களின் வாழ்க்கை போராட்டமெல்லாம் இவர்கள் இருவரையும் தாண்டி மூன்றாவது நபர்களை,காரணிகளை எதிர்த்தே இருந்திருக்கிறது.
   
        ஆனால் சமீப காலமாக ஆணாதிக்கம், பெண்ணியம் என்னும் கோசங்கள் எட்டுதிக்கும் முழங்கப்பட்டு, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் உண்மை, பொய் என்ற பாகுபாடு இல்லாமலும், நியாயம் அநியாயம் என்ற பேதம் இல்லாமலும் ஆண்களை வஞ்சம் தீர்க்கும் வகையில் இன்று சட்ட அமைப்புகளும், சமூக அமைப்புகளும் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

        இந்த ஆணாதிக்கம், பெண்ணியம் என்னும் கருத்துகள் உருவாவதற்கு முந்தைய  காலத்தையும், அது உருவான சூழ்நிலையையும் மற்றும் காரணத்தையும், தற்போது அது ஏற்படுத்தி வரும் விளைவுகளையும் இங்கு சற்றே உற்று நோக்குவோம்.

           இன்றைய இயந்திர, கணிப்பொறி தொழில் நுட்ப காலத்திற்கு முந்தைய கால மனித வாழ்க்கை என்பது அபாயகர வன விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும், இயற்கை பேரிடர்களிடமிருந்தும், உணவுக்கான கஷ்டங்களிலிருந்தும் மனிதன் தப்பித்து உயிர் பிழைப்பது என்பதே ஒவ்வொரு நாளும், நிமிடமும் பெரும் போராட்டம் மிகுந்தவைகளாகவே இருந்துள்ளது.

            
        ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்கவேண்டிய நிலைமையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மைவிட பலமான விலங்குகளிடமிருந்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தன. ஆண்கள் தனக்காகவும், தனது பெண் துணைக்காகவும் உணவு தேடி  காடு மேடுகளில் அலைந்தும், அபாயகரமான விலங்குகளிடம் போராடியும் தங்கள் உயிரை பணயம் வைத்து  பெண்களை பாதுகாப்பான இருப்பிடங்களில்  தங்கவைத்து பாதுகாத்து வந்தனர்.  (  இதனை தான் இக்கால பெண்ணியவாதிகள் ஆதிகாலம் முதலே ஆணாதிக்க ஆண்கள் பெண்களை வீட்டில் அடைத்து வைத்து ஒடுக்குவதாக கூப்பாடு போடுகிறார்கள். இத்தகைய கூப்பாடு பெண்களுக்கு நன்மை பயக்க கூடிய செயலா ? அல்லது பெண்களை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து தங்களது நுகர்வோர்களாக மாற்ற துடிக்கும் பன்னாட்டு வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் செயலா ? )

         ஆண் தனது கடின உழைப்பால் இரத்தமும், வியர்வையும் சிந்தி  பெரும் பாறைகளும், கற்களும், முட்புதர்களும் நிறைந்திருந்த காடுகளையும் மேடுகளையும் சமப்படுத்தி, உழுது, பயிருட்டு உணவு தானியங்களை உருவாக்கினான்.  பெண்கள் இலகு வகை பணிகளையும், உணவு சமைப்பதையும் செய்து வந்தார்கள். ( இரத்தமும், வியர்வையும் சிந்தி உடலை வருத்தி செய்யும் கடின பணிகளை பெண்கள் செய்ய வேண்டாம் என்று எந்த ஆணும் எந்த காலத்திலும் அவர்களை தடுத்து ஒடுக்கியதில்லை. ஆனால் இன்றைக்கு கடின பணிகளையும் இலகுவாக செய்யக்கூடிய இயந்திர, கணிப்பொறி தொழில்நுட்ப காலத்தில் பெரும்பாலும் உடலை வருத்தும் கடின பணிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பெண்ணியவாதிகள், தொன்றுதொட்டு ஆண் இனம் வேலை வாய்ப்புகளை தங்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டு பொருளீட்டி பொருளாதார பலம் பெற்று வருவதாகவும், பெண் இனத்திற்கு வேலை வாய்ப்பும், பொருளாதார சுதந்திரமும் மறுக்கப்பட்டு, பெண்களை அடிமைகளாகவே நடத்துவதாகவும் குள்ளநரி தனமாக ஊளையிட்டு வருகிறார்கள். ஆனால் வீர வசனம் பேசிவரும் பெண்ணியவாதிகள் இன்றைக்கும் உடலை வருத்தக்கூடிய, உயிருக்கு உத்திரவாதமில்லாத அபாயகரமான பணிகளை தந்திரமாக புறந்தள்ளி வருகிறார்கள். இவர்களின் நோக்கம் தேச முன்னேற்றத்திற்கு தங்கள் உழைப்பை தருவதல்ல, தங்கள் உடல் நோகாமல் பொருளாதார பலம் பெறுவது மட்டுமே. இந்த பொருளாதாரம் பெண்ணினத்தை தங்கள் நுகர்வோராக மாற்ற துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மட்டுமே )

         விலங்குகளை அடக்கி, காட்டை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றி மன்னர்கள் ஆண்டுவந்த கால கட்டத்தில் எதிரி நாட்டு மன்னர்கள் தொடுக்கும் போரிலிருந்து தங்களது பெண்டு, பிள்ளைகளை பாதுகாக்க போர்களில் பெண்களை ஈடுபடுத்தாமல் ஆண்கள் தங்களை மட்டுமே ஈடுபடுத்தி தங்கள் உயிரை இழந்து வந்துள்ளனர். ( இது ஆணாதிக்கமா ? அல்லது ஆண் தியாகமா ? )          கொடுங்கோல் மன்னன்களிடம் கொத்தடிமைகளாக பெரும்பாலும் ஆண்களே உடலை வருத்தி உயிர் துறந்திருக்கிரார்கள். அடிமை பெண்கள் பெரும்பாலும் காமத்திர்க்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். ( பெண்ணியவாதிகளின் அடிப்படை கொள்கையே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இல்லாத பாலுறவு சுதந்திரம் தான். ஆக பெண்ணியவாதிகளின் கொள்கை படி கொடுங்கோல் மன்னர்கள் காலத்திலும் கூட பெண் இனம் துன்பங்களை அனுபவித்தது இல்லை என்பது தான் அர்த்தம். பெண்ணியவாதிகளை பொருத்தவரையில் தங்கள் கற்பை இழப்பதில் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட சாதி, மத, நிற, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து உடைய ஆண்களிடம் தான், அதுவும் குறிப்பிட்ட சில வழிமுறைகளின் படி தான் தனது கற்பை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மற்ற ஆண்களிடம், வேறு விதமாக தங்கள் கற்பை பெண்ணிய வாதிகள் இழந்தால் கற்பழிப்பு சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். கற்பை பெண்ணடிமையின் ஒரு அடையாளமாக கருதும் இன்றைய பெண்ணிய வாதிகள் கூறும் கற்பழிப்பு குற்றசாட்டுகள் தீண்டாமையின் ஒரு வடிவமே அன்றி வேறு அல்ல. )

 
           அணு என்பது மிகச்சிறிய துகள். ஆனாலும் அதனுள் நடக்கும் நிகழ்வுகள் அண்ட சராசரங்களிலும், பிரபஞ்சங்களிலும் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஒப்பானதாகும். அணுவை திறம்பட கையாண்டால் பேராற்றலை வெளிப்படுத்த முடியும் என்பது விஞ்ஞான உண்மை. அதே போல் குடும்பம் என்னும் அமைப்பு சிறியது என்றாலும் அது சமூக, தேச, உலகத்தின் பயணத்தை தீர்மானிக்கும் வல்லமை கொண்ட அமைப்பாகும். குடும்ப உறவுகளின் உணர்வுகளை, பிள்ளைகளின் மனங்களை திறம்பட கையாண்டு செப்பனிட்டு வளர்த்தால் சமூக, தேச, உலக செழுமைக்கான மாபெரும் மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது நடைமுறை யதார்த்தம். பெண்களிடம் குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் சமூக, தேச, உலக செழுமைக்கான மாபெரும் மாற்றங்களை உருவாக்கும் பெரும் பொருப்பு வழங்கப்பட்டுள்ளது. ( சுயநல பெண்ணியவாதிகள் தாங்கள் குடும்பங்களில் அடைக்கப்பட்டு  அடிமைபடுத்தப்பட்டு வருவதாக கூறி குடும்ப அமைப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். குடும்ப அமைப்புகள் பெண்களை அடிமைப்படுத்தும் இடமாக கருதும் இவர்கள் திருமண பந்தங்களில் நுழையாமல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு திருமணங்களை செய்து கொள்கிறார்கள். தாங்கள் குடும்பங்களில் அடிமை படுத்தப்படுவதாக கூப்பாடு போட்டுகொண்டு தங்களின் முக்கிய குடும்ப பொறுப்புகளை, கடமைகளை தொலைத்து தான்தோன்றி தனமாக செயல்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வருமானத்தை வாரி வழங்கி வருகிரார்கள். குடும்ப பொறுப்பை தட்டி கழித்து வெளியே பொருள் ஈட்டிவரும் இவர்கள் ஆண்களுக்கு நிகராக கடின உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் எதனையும் செய்வதில்லை.  பணியை செய்வதற்காக தான் ஊதியம் என்று இருந்த நிலையைமை இவர்கள் பணிகள் என்பதே பெண்கள் பொருளாதார பலம் பெறுவதற்காக மட்டுமே உள்ள ஒரு சம்பிரதாயமாக  மாற்றியுள்ளார்கள். இவர்களால் சமூக, தேச பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளுக்கான வாய்ப்புகள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. )
                    19- ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில், நவீனத்துவத்தின் சூழ்நிலையில் பெண்ணியம் என்ற பிரச்சாரம் பரப்பப்பட்டது. பிரான்ஸ் நாட்டை சார்ந்த சைமன் தெபௌவோ  ( Simon De Beauvoir ) என்பவர் எழுதிய இரண்டாவது பாலினம் ( The second sex, 1949 ) என்ற நூலுக்கு பின்னர் பெண்ணிய கோசங்கள் மேலும் பிரபளப்படுத்தப்பட்டது. தொழில் துறையில் கடின போட்டி ஏற்பட்டு அதிக நுகர்வோர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இடங்களில் எல்லாம் இது போன்ற கருத்துகள் விதைக்கப்பட்டு பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இதனால் பெண் இனத்தை தங்களின் முக்கிய நுகர்வோர்களாக மாற்றும் அனைத்து தந்திரங்களும் கையாளப்பட்டது. அதன் படி பெண்கள் குடும்ப அமைப்புக்கு கட்டுப்படாதவர்களாகவும், நீதி, நியாயத்திற்கு கட்டுப்படாதவர்களாகவும், பொருளாதார வளம் உள்ளவர்களாகவும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்

     .அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 1991 -ம் ஆண்டு காலகட்டத்தில் புகுத்தப்பட்ட தாராளமயக்கொள்கைக்கு பின்பு  இந்தியாவிலும் பெண்ணியவாத பிரச்சாரங்கள் பன்னாட்டு வியாபார நிறுவனங்களால், இந்திய ஊழல் ஆட்சியாளர்களின் ஆதரவோடு படு தீவிரமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக குடும்பம் என்னும் கப்பலை கட்டுப்படுத்தும்  மாலுமிகளை பொய் வழக்குகளால் அடக்கி ஒடுக்கும் வகையில் ஒருதலைபட்சமான, அபாண்டமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதன் மூலம் குடும்ப பொறுப்புகளில் ஈடுபட்டு வந்த பெண்களை தங்கள் பொறுப்புகளை தட்டிகலித்துவிட்டு வெளியில் பொருள் தேட வர்புருத்தப்பட்டார்கள். இதனால் தனது குடும்பத்திற்காக பொருள் ஈட்டிவந்த ஆண்களின் பணிகள் தட்டி பறிக்கப்பட்டு அந்த ஆணின் குடும்பம் நிர்கதியாக நிற்பதும், பணிக்கு போகும் பெண்களின் குடும்பம் இரண்டு வருமானம் பெற்று அபரிமிதமான பொருளாதாரத்துடன் இருப்பதும். இந்த அபரிமிதமான பொருளாதாரம் பெற்றுள்ள ஒரு சாரார் சந்தையில் அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையை நிர்ணயிப்பவர்களாகவும், சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிக்கு போகாமல் உள்ள பெண்களை தங்கள் கணவனிடமிருந்து அநியாயமான விதத்தில் பணத்தை பறிக்கும் விதமாக இந்தியாவில் பொய் புகார்களை செய்வதற்காகவே வரதட்ச்சினை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், திருமண திருத்த சட்டம், கணவன் மனைவிக்கு ஊதியம் வழங்கும் சட்டம் போன்ற வழிமுறைகள் காண்பிக்கப்பட்டன.
 
       இவ்வாறாக பெண்கள் தாங்கள் ஈட்டிவந்த பொருளாதாரத்தை அழகுசாதன பொருள்களுக்காகவும், கேளிக்கைகளுக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும், போதை பொருட்களுக்காகவும், கலாச்சார சீரழிவு பார்ட்டிகளுக்காகவும் செலவழித்து வருகிறார்கள். இவ்விதமாக நம் தேசத்தின் பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது.  இதனால் பெண்கள் குடும்ப பொறுப்பை தட்டிகளித்து குடும்பங்களை சீரழிந்தும், ஒரு ஆணின் வேலையை தட்டி பரித்து அந்த ஆணின் குடும்பத்தை நலிவுற செய்தும், அந்நிய கலாச்சார மோகத்தால் தனது பொருளாதாரத்தை அந்நிய நாட்டிற்கு தாரைவார்த்தும் வருகிறார்கள்.

       இவ்வாறாக பன்னாட்டு வியாபாரிகள்  ஆண்களின் தியாகத்தை ஆணாதிக்கம் என்று பிரச்சாரம் செய்து, சுயநல தேச துரோக பெண்ணிய  கூளிப்பட்டாலத்தை உருவாக்கி, ஊழல் ஆரசியல்வாதிகளின் துணையோடு தேசத்தின் பொருளாதாரத்தை சுரண்டி அழித்தொழித்து வருகிறார்கள்.No comments:

Post a Comment